ரெயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல்


ரெயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல்
x

ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

சேலம் உட்கோட்ட ரெயில்வே சிறப்பு பிரிவினர், சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சங்கர், கண்ணன், செல்லப்பன் உள்ளிட்ட ரெயில்வே போலீசார் நேற்று சேலத்தில் இருந்து காட்பாடி வரை ஓடும் ரெயில்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது காட்பாடியில் இருந்து வந்த தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே சென்றபோது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என்பது குறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுப்பெட்டியில் கழிவறையின் அருகே கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தனர். அதில் 2 பண்டல்களில் சுமார் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டதில் கடத்தி வந்த மர்ம நபர் யார் என்று தெரியவில்லை. இதனால் கஞ்சாவை பறிமுதல் செய்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து கஞ்சா கடத்திய நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story