5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
சுத்தமல்லியில் விற்பனைக்காக 5 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
பேட்டை:
சுத்தமல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் சுத்தமல்லியை அடுத்த கொண்டாநகரம் விலக்கு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் தென்காசி மாவட்டம் ரவணசமுத்திரம் முகைதீன் தெருவை சேர்ந்த அப்துல் நாசர் மகன் பக்கீர் மைதீன் (வயது 22), அதே பகுதியை சேர்ந்த அப்துல் மஜீத் மகன் முகமது யூசுப் (35) என்பதும், அவர்கள் வைத்திருந்த பையில் தடை செய்யப்பட்ட 5 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story