யானை தாக்கி இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு
சிற்றாரில் யானை தாக்கி இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு
கன்னியாகுமரி
அருமனை,
அருமனை அருேக உள்ள சிற்றார் அரசு ரப்பர் கழக தொழிலாளி ஞானவள்ளி கடந்த 30-12-2022 அன்று காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து முதற்கட்டமாக அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது. இதனையடுத்து வன விலங்குகள் தாக்கி உயிரிழந்தோர்க்கு தமிழக அரசு வழங்கும் இழப்பீடு தொகை ரூ.5 லட்சத்தினை அவருக்கு பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில் யானை தாக்கி உயிரிழந்த ஞானவள்ளி குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை ரூ.5 லட்சத்திற்கான ஆணையை மாவட்ட வன அலுவலர் இளையராஜா நேற்று வழங்கினார். அப்போது களியல் வனச்சரக அலுவலர் முகமது முகைதீன், வனவர் வெங்கடேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story