5 பவுன் சங்கிலி- வெள்ளி பொருட்கள் திருட்டு


5 பவுன் சங்கிலி- வெள்ளி பொருட்கள் திருட்டு
x

5 பவுன் சங்கிலி- வெள்ளி பொருட்கள் திருட்டு

தஞ்சாவூர்

தஞ்சை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 71). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரியான இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 4 நாட்களுக்கு முன்பு குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் சங்கிலி மற்றும் வெள்ளிப்பொருட்கள் உள்பட ரூ.52 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செல்வராஜ் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story