கேட்பாரற்று கிடந்த 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


கேட்பாரற்று கிடந்த 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 31 May 2023 12:15 AM IST (Updated: 31 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மணல்மேடு அருகே கேட்பாரற்று கிடந்த 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது

மயிலாடுதுறை

மணல்மேடு:

மணல்மேடு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாகவள்ளி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் மணல்மேடு போலீஸ் சரகத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணல்மேடு பஸ் நிறுத்தத்தை ஒட்டி பல நாட்களாக கேட்பாரற்று கிடந்த 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று வழக்குப்பதிவு செய்தனர். குற்ற விசாரணைமுறை சட்டத்தின் படி இது போன்ற வாகனங்கள் கைப்பற்றப்பட்டு யாரும் உரிமை கொண்டாடாத நிலையில் அரசு அதிகாரிகள் அவற்றை ஏலம் விடுவதற்கான நடவடிக்கை எடுப்பார்கள் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story