அஞ்சுகிராமம் அருகே டெம்போவில் மணல் கடத்திய 5 பேர் கைது


அஞ்சுகிராமம் அருகே டெம்போவில் மணல் கடத்திய 5 பேர் கைது
x

அஞ்சுகிராமம் அருகே டெம்போவில் மணல் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

அஞ்சுகிராமம்,

அஞ்சுகிராமம் அருகே டெம்போவில் மணல் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மணல் கடத்தல்

வன பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் சிவக்குமார் தலைமையில் வனக்காப்பாளர்கள் அசோக், முத்துராமலிங்கம், சிவராமன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சிவ தணிகை வேலன், சபரி சுதாகர் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் இரவு ராஜாவூர் தோவாளை கால்வாய் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த டெம்போவை வழிமறித்தனர். உடனே அதில் இருந்த 5 பேரை பிடித்து மணலை பறிமுதல் செய்தனர். ஆனால் டிரைவர், உரிமையாளர் தப்பி ஓடி விட்டனர்.

பின்னர் இதுதொடர்பாக அழகப்பபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன், ஜஸ்டின், பிரதாப், அலெக்ஸாண்டர் பினோ, கோட்டவிளையை சேர்ந்த சதீஷ் ஆகிய 5 பேரையும் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடிவருகின்றனர்.


Next Story