காற்றாலைகளில் மின்ஒயர் திருடிய 5 பேர் கைது
பாவூர்சத்திரம் பகுதிகளில், காற்றாலைகளில் மின்ஒயர் திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்
பாவூர்சத்திரம் பகுதிகளில், காற்றாலைகளில் மின்ஒயர் திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மின்ஒயர் திருட்டு
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதிகளில் காற்றாலைகளில் உள்ள காப்பர் ஒயர்கள் மற்றும் மின் ஒயர்கள் அவ்வப்போது திருட்டு போவதாக பாவூர்சத்திரம் போலீசுக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாவூர்சத்திரம் அடுத்துள்ள தென்காசி ரோட்டில் கே.டி.சி. நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு வேன் ஒன்றை மடக்கி சோதனை செய்தனர்.
5 பேர் கைது
அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அந்தப் பகுதியில் உள்ள காற்றாலைகளில் மின் ஒயர்களை அவ்வப்போது திருடியது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து லோடு வேனில் இருந்த சென்னை மூலச்சத்திரம் 2-வது தெருவைச் சேர்ந்த தனசேகர் மகன் கமலக்கண்ணன் (வயது 30), சென்னை செங்குன்றம் கே.கே.நகர் காமராஜர் தெரு காளிதாஸ் மகன் கந்தவேல் (30), கோயம்பேடு காந்திநகர் கண்ணதாசன் தெரு சகா மகன் சரத்குமார் (23), விருகம்பாக்கம் காந்திநகர் ராஜேஷ் மகன் கரண் (24), செங்குன்றம் கோழிமேடு பெருமாள் கோவில் தெரு முனுசாமி மகன் மணிகண்டன் (31) ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
ஆயுதங்கள் பறிமுதல்
திருடுவதற்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றினர்.
பின்னர் 5 பேரையும் தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.