தனியார் பவர் பிளாண்டில் மின்சார ஒயர் திருடிய 5 பேர் கைது


தூத்துக்குடி அருகே தனியார் பவர் பிளாண்டில் மின்சார ஒயர் திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே புதூர்பாண்டியாபுரம் பகுதியில் தனியார் பவர் பிளாண்ட் இயங்கி வருகிறது. இங்கு இருந்த சுமார் 4 ஆயிரம் மீட்டர் ஒயரை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் என்று கூறப்படுகிறது. இது குறித்து பவர் பிளாண்ட் மேலாளர் கணேசன் சிப்காட் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, மின்சார ஒயரை திருடியதாக தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த செல்வக்குமார் (வயது 31), ராஜகோபால் நகரை சேர்ந்த அருணாச்சலம் (46), மடத்தூரை சேர்ந்த தனகுருசிங் (20), மற்றும் 2 பேர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story