குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது


குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது
x

குண்டர் சட்டத்தில் 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை மாவட்டம் நடுக்கல்லூர் நடுத்தெருவை சேர்ந்த நம்பி கடந்த நவம்பர் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைதான சுத்தமல்லி கோடகநல்லூரை சேர்ந்த முருகன் மகன் இசக்கி பாண்டி என்ற சிவா (வயது 26), மாரியப்பன் மகன் பாலசுந்தர் (22), சிங்காரவேலன் மகன் துரைமுருகன் என்ற ராஜா (19), கருப்பசாமி மகன் நங்கையார் (22), நடுக்கல்லூரை சேர்ந்த கங்கா பாண்டியன் மகன் சுந்தரபாண்டியன் (25) ஆகிய 5 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, நெல்லை மாநகர மேற்கு காவல் துணை கமிஷனர் சரவண குமார், டவுன் சரக காவல் உதவி கமிஷனர் விஜயகுமார் மற்றும் பேட்டை இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி ஆகியோர் பரிந்துரை ெசய்தனர். இதையடுத்து நெல்லை மாநகர கமிஷனர் அவினாஷ் குமார் உத்தரவின் படி, 5 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த உத்தரவு ஆணையை பேட்டை இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் கொடுத்தார்.


Next Story