கஞ்சா, போதை மாத்திரைகளுடன் 5 பேர் கைது


கஞ்சா, போதை மாத்திரைகளுடன் 5 பேர் கைது
x

மதுரையில் கஞ்சா, போதை மாத்திரைகளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை


மதுரையில் கஞ்சா, போதை மாத்திரைகளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

போதை மாத்திரை

மதுரை முத்துப்பட்டி பகுதியில் போதை மருந்துகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தனிப்படை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள சுடுகாட்டு பகுதியில் ஒரு கும்பல் போதை மருந்து, மாத்திரை மற்றும் ஊசிகளுடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

போலீசாரை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றது. ஆனால் அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியை சேர்ந்த ஆஷிக்அலி (வயது 26), சையதுமுகமது ஆஸ்பெக் (19) ஆகியோர் பிடிபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கைது

மேலும், அவர்களிடம் இருந்த 40 பாக்கெட் வலி நிவாரணி மருந்துகள், 5 ஊசி மருந்து மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோல், எஸ்.எஸ்.காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மாதவன் (21), விராட்டிபத்து பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கணேசன் (22), மேலமடை பகுதியில் கஞ்சா விற்ற கிருஷ்ணன் (19) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Related Tags :
Next Story