பொது இடத்தில் புகைபிடித்த 5 பேருக்கு அபராதம்
பொது இடத்தில் புகைபிடித்த 5 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தென்காசி
சிவகிரி:
வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய் உத்தரவின்பேரில் சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் ரவிக்குமார், சிவா, மருத்துவமில்லா சுகாதார மேற்பார்வையாளர் மாரிமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினர் வாசுதேவநல்லூர் பஸ் நிலையம், மெயின் பஜார், காய்கறி மார்க்கெட் பஜார், பள்ளிகள் அருகே மற்றும் பொதுஇடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பொதுஇடங்களில் புகை பிடித்ததாக 5 பேருக்கு தலா ரூ.100-ம், பள்ளிகளின் அருகே கடைகளில் பீடி, சிகரெட் விற்பனை செய்ததாக 2 பேருக்கு தலா ரூ.200-ம் அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story