மது விற்ற 5 பேர் கைது


மது விற்ற 5 பேர் கைது
x
தினத்தந்தி 17 April 2023 1:00 AM IST (Updated: 17 April 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

கொண்டலாம்பட்டி:-

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் மது விற்பனை நடப்பதாக கொண்டலாம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அந்த பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சின்னபுத்தூரைச் சேர்ந்த நல்லம்மாள் (வயது 57), மேட்டுதெருவை சேர்ந்த அலமேலு (50), பி.நாட்டாமங்கலத்தை சேர்ந்த மகேந்திரன் (57), பெரிய புத்தூரை சேர்ந்த கந்தசாமி (56), கொண்டலாம்பட்டியை சேர்ந்த ரமேஷ் (46) ஆகிய 5 பேர் மது விற்றதாக போலீசார் கைது செய்தனர்.


Next Story