சாராயம் விற்ற-கடத்திய 5 பேர் கைது
சாராயம் விற்ற-கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரியின் பின்புறம் சாராய விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு சாராயம் விற்ற தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் மெயின்ரோட்டை சேர்ந்த செல்லத்துரை மகன் முத்துக்குமார் (வயது 34) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.இதேபோல மயிலாடுதுறை கூறைநாடு அறுபத்துமூவர் பேட்டை பகுதியில் சாராயம் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் (53), மயிலாடுதுறை திருவிழந்தூர் தீப்பாய்ந்த அம்மன் கோவில் அருகே சாராயம் விற்ற கூறைநாடு கிட்டப்பா பாலம் வேதம் பிள்ளை தெருவைச் சேர்ந்த அய்யப்பன் மகன் அரவிந்தன் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். நீடூர் ெரயில்வே கேட் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த மணல்மேடு மீன் தொட்டித் தெருவை சேர்ந்த ராகவன் மகன் ராஜா (29), நாகராஜ் மகன் முத்து (37) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் யெ்தனர்.