குட்கா விற்ற 5 பேர் கைது


குட்கா விற்ற 5 பேர் கைது
x

குட்கா விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில், டவுன் போலீசார் ஆம்பூரில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது குட்கா விற்றதாக புதுமனை கே.எம் நகர் முதல் தெருவை சேர்ந்த கலீம் (வயது 33), ரஹ்மான் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த முகமது ஆசிப் (27), வெங்கிளி பகுதியை சேர்ந்த பாரூக் (47), சாய்பான்ஷா கொல்லை பகுதியை சேர்ந்த அப்ரோஸ் (39), கஸ்பா பி பகுதியை சேர்ந்த ரபீல் உல் (59) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து குட்கா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.


Next Story