மதுபானம் விற்ற 5 பேர் கைது
மதுபானம் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி
போடி நகர் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசு அனுமதி இன்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்த முனிசிபல் காலனியைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 31), முனியம்மாள் (60), சேது பாஸ்கர் தெருவை சேர்ந்த சந்திரா (57), பேச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தங்கபாண்டி (52) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 37 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், பெரியகுளம் தென்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனுசியா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியகுளம் அருகே வடுகப்பட்டி பகுதியில் விற்பனைக்காக மதுபாட்டில்கள் வைத்திருந்த முருகன் (50) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story