கூடுதல் விலைக்கு மதுவிற்ற 5 பேர் கைது


கூடுதல் விலைக்கு மதுவிற்ற 5 பேர் கைது
x

அரக்கோணத்தில் அதிக விலைக்கு மதுவிற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2,265 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை

அதிக விைலக்கு மது விற்பனை

திருவள்ளூவர் தினத்தன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதன் காரணமாக அரக்கோணம் பகுதியில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் சில பகுதிகளில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலோமன் ராஜாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அவரது தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் தாசன், ரவி மற்றும் போலீசார் திருவள்ளூர் சாலை, அம்பேத்கர் நகர் மற்றும் காவனூர் சாலை ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அம்பேத்கர் நகர் பகுதியில் 2 பேர் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்றுக் கொண்டிருந்ததை கண்ட போலீசார், அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரனையில் அவர்கள் அதேப் பகுதியை சேர்ந்த செந்தில் (வயது 39), காவனூர் ரோடு பகுதியை சேர்ந்த சபரிநாதன் (47) என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 1,850 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

5 பேர் கைது

தொடர்ந்து நேற்று போலீசார் ரோந்து பணியில் இருந்த போது பஜார் அருகே உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள புதர் மறைவில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்த போது அரக்கோணம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த அன்பழகன் (46) என்பதும், கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதும் தெரிய வந்தது. அவனிடமிருந்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்துசெந்தில், சபரிநாதன், அன்பழகன் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இதே போல் அரக்கோணம் தாலுகா இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையில், போலீசார் தணிகை போளூர், வளர்புரம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வளர்புரம் பகுதியில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த சிலம்பரசன் (35), குப்பன் (47) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 400 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இவர்கள் 5 பேரிமும் இருந்து 2,265 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story