வருகிற 30-ந் தேதிக்குள் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை-ஆணையாளர் கிறிஸ்துராஜ் தகவல்


வருகிற 30-ந் தேதிக்குள் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை-ஆணையாளர் கிறிஸ்துராஜ் தகவல்
x

வருகிற 30-ந்தேதிக்குள் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்து உள்ளார்.

சேலம்

ஊக்கத்தொகை

இது தொடர்பாக சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2023-2024-ம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்துவரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை அல்லது ரூ.5 ஆயிரம் வரை பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். எனவே மாநகராட்சி பகுதியில் உள்ள சொத்து உரிமையாளர்கள், சொத்து வரி வசூலிக்க வீடு தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மூலம் அமைந்துள்ள வரி வசூல் மையங்கள் ஆகியவற்றில் கடன், பற்று அட்டை, காசோலை, வரைவோலை மூலமாகவும், டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாகவும் செலுத்த வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

அதன்படி விரைவில் சொத்து வரியை செலுத்தி மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப்பணிகளில் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும்.

வாகனங்கள் பறிமுதல்

அதே போன்று மலக்கசடு, கழிவு நீர் அகற்றும் பணி மேற்கொள்ளும் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு உள்ளன. அதன்படி சேலம் மாநகராட்சி மற்றும் கருப்பூர், அயோத்தியாப்பட்டனம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயக்கப்பட்டு வரும் கழிவுநீர் அகற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் சேலம் மாநகராட்சியில் ரூ.2 ஆயிரம் செலுத்தி 2 ஆண்டுகளுக்கு செல்லத்தக்க வகையில் உரிய உரிமம் பெற வேண்டும்.

மேலும் சேகரிக்கப்படும் கழிவுநீரை மாநகராட்சியின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் வெளியேற்ற வேண்டும். இந்த நடைமுறைகளை கடைபிடிக்க தவறும்பட்சத்தில் வாகனங்கள் பறிமுதல் செய்வதுடன் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story