சொத்துவரியை 30-ந்தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத் தொகை
வருகிற 30-ந் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
பட்டுக்கோட்டை:
வருகிற 30-ந் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஊக்கத்தொகை
பட்டுக்கோட்டை நகராட்சியில் 2023-2024 ஆண்டிற்கான முதல் அரையாண்டு சொத்துவரியினை வருகிற 30-ந்தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமைதாரர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது.
இதில் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரையில் ஊக்கத்தொகை வழங்கப்படும். எனவே பட்டுக்கோட்டையை சேர்ந்தவர்கள் வருகிற 30-ந்தேதிக் குள் சொத்து வரியை செலுத்தி ஊக்க தொகை பெற வேண்டும்.
விளம்பர பதாகைகள்
இதுதொடர்பாக விளம்பர பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்களை வீடு, வீடாகவும், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், கல்விகூடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.