தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 5½ பவுன் சங்கிலி பறிப்பு


தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 5½ பவுன் சங்கிலி பறிப்பு
x

தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 5½ பவுன் சங்கிலி பறிப்பு

தஞ்சாவூர்

தஞ்சையில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 5½ பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

5½ பவுன் சங்கிலி

தஞ்சையை அடுத்த மருங்கை பகுதியை சேர்ந்தவர் சத்தியநாதன் (வயது 34) விவசாயி. இவருக்கு சித்ரா என்ற மனைவியும், 8 மாத குழந்தையும் உள்ளனர். சம்பவத்தன்று இரவு சத்தியநாதன் அவருடைய வீட்டின் உள்ளே தூங்கி கொண்டிருந்தார்.

சித்ரா தனது குழந்தையுடன் ஹாலில் தூங்கி கொண்டிருந்தார். இந்த நிலையில் நள்ளிரவு சத்திய நாதன் வீட்டின் பின்வாசல் வழியாக வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் ஹாலில் தூங்கி கொண்டிருந்த சித்ராவின் கழுத்தில் கிடந்த 5½ பவுன் சங்கிலியை பறிக்க முயன்றனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதனால் அதிர்ச்சி அடைந்த சித்ரா, தூக்கத்தில் இருந்து விழித்து சங்கிலியை கையால் பிடித்து கொண்டு திருடன், திருடன் என சத்தம் போட்டார். சத்தம் கேட்டு சத்தியநாதன் வருவதற்குள் மர்மநபர்கள் சித்ராவின் கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து சத்தியநாதன் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story