வீட்டில் தூங்கிய மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு


வீட்டில் தூங்கிய மூதாட்டியிடம்  5 பவுன் சங்கிலி பறிப்பு
x

மணவாளக்குறிச்சி அருகே வீட்டில் தூங்கிய மூதாட்டியிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி அருகே வீட்டில் தூங்கிய மூதாட்டியிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

மூதாட்டி

மணவாளக்குறிச்சி அருகே உள்ள தருவை பகுதியை சேர்ந்தவர் மணி (வயது42). அந்த பகுதியில் கேபிள் டி.வி. ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் இவரது தாயார் சாந்தம்மாள் (75) தங்கியுள்ளார்.

சம்பவத்தன்று இரவு மணி, அவரது தாயார் சாந்தம்மாள் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது காற்றுக்காக சமையல் அறை ஜன்னல் கதவை திறந்து வைத்திருந்ததாக தெரிகிறது.

இரவில் யாரோ மர்ம நபர் திறந்து கிடந்த ஜன்னல் வழியாக கையை போட்டு சமையல் அறை கதவை திறந்து வீட்டுக்குள் புகுந்துள்ளார்.

தங்க சங்கிலி பறிப்பு

பின்னர் அந்த நபர் சாந்தம்மாளின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்று விட்டார். மறுநாள் காலையில் சாந்தம்மாள் கண்விழித்த போது கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி பறிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மணி மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.


Next Story