மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு


மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
x

பட்டுக்கோட்டையில் மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் பறித்து சென்றார்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டையில் மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் பறித்து சென்றார்.

5 பவுன் சங்கிலி பறிப்பு

பட்டுக்கோட்டை ராஜபாளையம் தெருவைச் சேர்ந்த குருநாதன் மனைவி பிரேமா (வயது 54).குருநாதன் ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். சம்பவத்தன்று காலை செட்டியார் தெருவில் உள்ள பெட்டிக்கடையில் பால் வாங்கிக் கொண்டு பிரேமா வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒரு வாலிபர், பிரேமா கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை பறித்தார். அப்போது திடுக்கிட்டு சத்தம் போட்ட பிரேமாவை மர்ம நபர் கீழே தள்ளிவிட்டு சங்கிலியுடன் தப்பி சென்றார்.

மர்ம நபருக்கு வலைவீச்சு

இதுகுறித்து பிரேமா பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் .சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் ெஹல்மெட் அணிந்து வந்து சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதே பகுதியில் ஏற்கனவே மோட்டார் சைக்கிளில் வந்து பெண்களிடம் சங்கிலி பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story