கும்பாபிஷேகத்தில் பெண்ணிடம் 5 பவுன் நகை திருட்டு


கும்பாபிஷேகத்தில் பெண்ணிடம் 5 பவுன் நகை திருட்டு
x

காரியாபட்டி அருகே கும்பாபிஷேகத்தில் பெண்ணிடம் 5 பவுன் நகை திருடி சென்றனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே ஆவியூர் கிராமத்தில் உள்ள கருப்பணசாமிகோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி (வயது 25) என்பவர் சாமி தரிசனம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை யாரோ திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து லட்சுமி அளித்த புகாரின் பேரில் ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story