கோவில் கும்பாபிஷேக விழாவில் 2 பெண்களிடம் 5 பவுன் நகை திருட்டு
கோவில் கும்பாபிஷேக விழாவில் 2 பெண்களிடம் 5 பவுன் நகை திருடப்பட்டது.
மதுரை
பேரையூர்
கள்ளிக்குடி தாலுகா எம்.புளியங்குளத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த விழாவில் அதே ஊரை சேர்ந்த சக்கனண் மனைவி பாக்கியலட்சுமி (வயது 52), முனியசாமி மனைவி பாக்கியம் (68) ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பாக்கியம் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க செயினையும், பாக்கியலட்சுமி கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க செயினையும் மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வில்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story