மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு


மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
x

மூதாட்டியிடம் 5 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

பெரம்பலூர்

மங்களமேடு:

சங்கிலி பறிப்பு

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் மங்களமேட்டை அடுத்த கீழப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன். இவரது மனைவி ஆவரணம்(வயது 62). நேற்று காலை மாடு மேய்க்க சென்ற இவர், மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், ஆவரணம் அருகே வந்து சிறுகுடல் கிராமத்திற்கு எந்த வழியாக செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளார். அவருக்கு ஆவரணம் வழி சொல்ல முயன்றபோது, அந்த மர்மநபர் திடீரென ஆவரணத்தின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்தார்.

போலீசார் விசாரணை

இதனால் அதிர்ச்சியடைந்த ஆவரணம் சத்தம் போட்டார். ஆனால் அந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றார். இதையடுத்து மங்களமேடு போலீஸ் நிலையத்தில் ஆவரணம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story