ஒரே மோட்டார்சைக்கிளில் 5 மாணவர்கள் சாகச பயணம்


ஒரே மோட்டார்சைக்கிளில் 5 மாணவர்கள் சாகச பயணம்
x

வேலூர் அருகே ஒரே மோட்டார்சைக்கிளில் 5 மாணவர்கள் சாகச பயணம் செய்தனர். அவர்களுக்கு நூதன தண்டனை வழங்க போலீசார் முடிவுசெய்துள்ளனர்.

வேலூர்

வேலூர் அருகே ஒரே மோட்டார்சைக்கிளில் 5 மாணவர்கள் சாகச பயணம் செய்தனர். அவர்களுக்கு நூதன தண்டனை வழங்க போலீசார் முடிவுசெய்துள்ளனர்.

சாகச பயணம்

பள்ளி மாணவர்கள் பஸ்களில் ஆபத்தை உணராமல் படிக்கட்டுகளில் தொங்கியபடி கை, கால்களை நீட்டியவாறும், பஸ்களின் ஜன்னல்களில் தொங்கியவாறும் பயணம் மேற்கொள்கிறார்கள். அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவார்கள்.

இந்த நிலையில் வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரே மோட்டார் சைக்கிளில் ஐ.டி.ஐ. மாணவர்கள் 5 பேர் ஒருவர் மீது ஒருவர் நின்று ஆபத்தை விளைவிக்கும் வகையில் சாகச பயணம் செய்துள்ளனர்.

இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது வாகன ஓட்டிகள் சிலர் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். எனினும் அவர்கள் அதை கண்டு கொள்ளாமல் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

நூதன தண்டனை

இந்த காட்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. மோட்டார் சைக்கிள் பதிவெண்ணை வைத்து அவர்கள் யார்? என்று வேலூர் மாவட்ட காவல்துறை விசாரணையை தொடங்கியது. விசாரணையில், அந்த மாணவர்கள் விரிஞ்சிபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், வகுப்பு முடிந்து வீட்டிற்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்தவாறு சென்றதும் தெரியவந்தது.

பின்னர் அந்த மாணவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர். மேலும் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (வியாழக்கிழமை) அந்த மாணவர்களுக்கு நூதனத் தண்டனை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Next Story