5 ஊர்களின் பெயர் பலகைகள் மாயம்


5 ஊர்களின் பெயர் பலகைகள் மாயம்
x

5 ஊர்களின் பெயர் பலகைகள் மாயமாயின.

அரியலூர்

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையினரால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களின் நுழைவு வாயிலில் பச்சை நிறத்தில் ஊரின் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கீழப்பழுவூரில் இருந்து திருமழபாடி செல்லும் சாலை வழியே உள்ள தட்டான்சாவடி, கா.மேட்டுதெரு, திருமழபாடி, பாக்கியநாதபுரம் உள்பட 5 கிராமங்களின் பெயர் பலகைகளை யாரோ மர்மநபர்கள் கழற்றி திருடி சென்றுள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பெயர் பலகைகளை சேதப்படுத்தியும் சென்றுள்ளனர். இச்சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறையினர் தற்போது ஆய்வு செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்க உள்ளதாகவும் நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story