கூட்டுறவு வங்கிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்


கூட்டுறவு வங்கிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
x

கடன் கொடுக்காத கூட்டுறவு வங்கிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் பேச்சிப்பாறையிலுள்ள ஒரு கூட்டுறவு நிலவள வங்கியில் ரூ.1 லட்சம் கடன் கேட்டார். அதற்கு வங்கியினர் ரூ.2,100 முன் பணமாக செலுத்த வேண்டுமென கூறியுள்ளனர். உடனே அந்தப் பணத்தை செலுத்தியுள்ளார். இந்த முன் பணத்தில் ரூ.1,000 பங்குத் தொகையாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பலமுறை வங்கி நிர்வாகத்தை அணுகியும் அவருக்கு கேட்ட கடன் கிடைக்கவில்லை. இதனால் பாதிப்படைந்த கிருஷ்ணன் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் கூட்டுறவு நிலவள வங்கியின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக் காட்டி ரூ.5,000 அபராதம் விதித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட கிருஷ்ணனுக்கு அபராத தொகை ரூ.5,000, வழக்கு செலவு தொகை ரூ.2,500 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


Next Story