செம்மண் கடத்திய 5 வாகனங்கள் பறிமுதல்
செம்மண் கடத்திய 5 வாகனங்கள் பறிமுதல்
தக்கலை:
தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் தலைமையிலான போலீசார் நேற்று திக்கணங்கோடு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு தனியார் நிலத்தில் 3 டெம்போக்களில் செம்மண்ணை ஏற்றிக் கொண்டிருப்பதை கண்டனர். அந்த நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அதில் ஒருவர் தப்பியோடி விட்டார். 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அனுமதியின்றி செம்மண்ணை கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து 3 டெம்போக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக செம்பொன்விளையை சேர்ந்த ராஜேஷ் (வயது 25), மத்திகோடு பகுதியை சேர்ந்த அஜய் (21) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதுபோல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஸ்டான்லி கோழிப்போர்விளையில் செம்மண் கடத்தியதாக ஒரு டெம்போ, பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக புதூர் பகுதியை சேர்ந்த மணிகண்ட ராஜா (32), சுபின் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.