5 ஆண்டுகள் சிறை


5 ஆண்டுகள் சிறை
x

மூதாட்டியிடம் 10 பவுன் சங்கிலியை பறித்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

தஞ்சாவூர்

மூதாட்டியிடம் 10 பவுன் சங்கிலியை பறித்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

மூதாட்டி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் ஆஸ்பத்திரி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மனைவி கஸ்தூரி (வயது 81). கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந் தேதி இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது குடவாசல் அருகே உள்ள எரவாஞ்சேரி வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (61) என்பவர் கஸ்தூரி வீட்டுக்கு வந்து வீடு வாடகைக்கு கேட்டுள்ளார். அதற்கு கஸ்தூரி வீட்டில் யாரும் இல்லை, எனது மகன் சென்னையில் வேலை பார்த்து வருகிறான், அவன் ஊருக்கு வந்த பிறகு கேட்டு சொல்வதாக கூறிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

10 பவுன் சங்கிலி பறிப்பு

வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த ஆறுமுகம் தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை கஸ்தூரி மீது தூவினார். பின்னர் அவர் அணிந்து இருந்த 10 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து கஸ்தூரி நாச்சியார்கோவில் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர். இந்த வழக்கு கும்பகோணம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

5 ஆண்டுகள் சிறை

நேற்று வழக்கை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி இளவரசி, குற்றம் நிரூபிக்கப்பட்ட ஆறுமுகத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.


Next Story