முதியவருக்கு 5 ஆண்டு சிறை
முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விருதுநகர்
சாத்தூர்,
சாத்தூர் அருகே உள்ள சுந்தரலிங்கபுரத்தை சேர்ந்தவர் சங்கரவேலுச்சாமி (வயது 60). கடந்த 2011-ம் ஆண்டு குடும்ப தகராறு காரணமாக அவரது மனைவி லிங்கம்மாள் மற்றும் 2 மகள்களை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் 3 பேரும் காயமடைந்து சிகிச்சைக்கு பிறகு குணம் ஆகினர். இதுகுறித்து அப்பையநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்த வழக்கு சாத்தூர் சப்-கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி சங்கர் விசாரித்து சங்கரவேலுச்சாமிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்தார். இந்த அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு அளித்தார்.
Related Tags :
Next Story