தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை


தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

நீலகிரி

ஊட்டி,

7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பாலியல் தொல்லை

நீலகிரி மாவட்டம் ஊட்டி சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு 12 வயதில் மகள் உள்ளாள். அவள் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில் மாணவியின் தந்தை தினமும் வேலைக்கு செல்லும் போது, வீட்டு அருகே உள்ள தொழிலாளியான ஸ்ரீகாந்த் (வயது 49) என்பவரிடம் வீட்டு சாவியை கொடுத்துவிட்டு செல்வது வழக்கம்.

இந்தநிலையில் 4.9.2019-ந் தேதி பள்ளி முடிந்து வந்த மாணவி, வீட்டு சாவியை வாங்குவதற்காக ஸ்ரீகாந்தின் வீட்டுக்கு சென்று உள்ளாள். அப்போது ஸ்ரீகாந்த் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தாள்.

5 ஆண்டு சிறை

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஊட்டி ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் விசாரணை நடத்தியதில், ஸ்ரீகாந்த், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் நேற்று வழக்கின் தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீகாந்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி நாராயணன் தீர்ப்பு கூறினார். மேலும் அபராதத்தை கட்ட தவறினால், கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார்.



Next Story