தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை


தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 20 April 2023 12:30 AM IST (Updated: 20 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை அடுத்த கீழக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 57). கூலித்தொழிலாளி. கடந்த 2021-ம் ஆண்டு இவர், வீடு புகுந்து 13 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் முருகன் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் அவர் மீது திண்டுக்கல் விரைவு மகிளா கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். வழக்கு விசாரணையை நீதிபதி சரண் நடத்தி வந்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார். பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட முருகனுக்கு இந்திய தண்டனை சட்டம் 451-ன் கீழ் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த குற்றத்துக்காக ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் மற்றும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் சிறை, ரூ.8 ஆயிரம் அபராதம் என மொத்தம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரண் உத்தரவிட்டார். பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story