சிறுமியிடம் தவறாக நடந்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை


சிறுமியிடம் தவறாக நடந்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை
x

சிறுமியிடம் தவறாக நடந்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூர் கடம்பன்குளத்தை சேர்ந்தவர் பூவையா (வயது 68), தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 7-ந் தேதி 12 வயது சிறுமியிடம் தவறாக நடந்து உள்ளார்.

இதுகுறித்து வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பூவையாவை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி அன்புச்செல்வி இந்த வழக்கை விசாரித்து பூவையாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெப ஜூவராஜா ஆஜரானார்.


Next Story