மனைவியை கொலை செய்ய முயன்ற தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
மனைவியை கொலை செய்ய முயன்ற தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
மனைவியை கொலை செய்ய முயன்ற தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
கொல்ல முயற்சி
சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜான்ராஜ் (வயது 33). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜோதி லட்சுமி (29). இந்தநிலையில் ஜான்ராஜ் வேலைக்கு சரிவர செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். வழக்கம் போல் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜான்ராஜ், அரிவாள் மனையை எடுத்து ஜோதிலட்சுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்தார்.
அப்போது அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.
5 ஆண்டு சிறை
இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், ஜான்ராஜை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பகவதி அம்மாள் விசாரித்து மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்த கணவனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.