மாண்டஸ் புயல் காரணமாக 50 ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்கள் சேதம்


மாண்டஸ் புயல் காரணமாக 50 ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்கள் சேதம்
x

கல்பட்டு கிராமத்தில் மாண்டஸ் புயல் காரணமாக 50 ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்கள் சேதம் அடைந்தது.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் உள்ள மாண்டஸ் புயல் காரணமாக ஏராளமான வாழை மரங்கள் காற்றில் சாய்ந்து விட்டது. இதுகுறித்து விவசாயிகள் புகாரின் பேரில் உதவி தோட்டக்கலை அலுவலர் சுதாகர், கிராம நிர்வாக அலுவலர் நித்யானந்தம் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது சேதமடைந்த வாழைத்தோட்டங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதமடைந்த வாழைத்தோட்டங்களை மதிப்பீடு செய்து அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்படும், இதற்கு உரிய முறையில் மனு செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கினர்.

கல்பட்டு கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் வாழைத்தோட்டங்கள் சேதமடைந்துள்ளது என கிராம நிர்வாக அலுவலர் நித்யானந்தம் தெரிவித்தார்.


Next Story