50 ஏக்கர் பருத்தி செடிகள் நீரில் மூழ்கின
கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 50 ஏக்கர் பருத்தி செடிகள் நீரில் மூழ்கின.
அவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர், கொள்ளிடத்தில் அதிகளவு வந்து கொண்டிருப்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நாதல்படுகை, வெள்ள மணல், முதலைமேடுதிட்டு ஆகிய கிராமங்ளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்குள்ளவர்கள் வெளியேறி அரசின் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர்.
பருத்தி செடிகள் மூழ்கின
இந்தநிலையில் நேற்றும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீரின் வரத்து அதிகரித்ததால் காட்டூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரை வலுவிழந்து கரை உடையும் அபாயம் ஏற்பட்டது. எனவே, அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கருங்கற்கள் கொட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க, கொள்ளிடம் அருகே அழிஞ்சிஆறு கதவணை வழியே தண்ணீர் வெளியேறி செல்வதால் குத்தவக்கரை கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 50 ஏக்கர் பருத்தி செடிகள் தண்ணீரில் மூழ்கின. கொள்ளிடம் அருகே நாதல்படுகை கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது.
குறுவை பயிர்
மேலும், அப்பகுதியில் குருவை சாகுபடிக்கு தயார்நிலையில் வைக்கப்பட்டு இருந்த விளைநிலங்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட விளைநிலங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அழிஞ்சிஆறு கதவணையில் இருந்து தண்ணீர் உள்புகாதவாறு தடுக்கும் விதத்தில் கதவணையை சீர் செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.