50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
திண்டுக்கல்லில் கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட 50 கிலோ பிளாஸ்டிக் ெபாருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி சுகாதார ஆய்வாளர்களுக்கு ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதையடுத்து மாநகர்நல அலுவலர் இந்திரா தலைமையில் சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், திண்டுக்கல்லில் உள்ள கடைகள், லாரி பார்சல் நிறுவனங்களில் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். இதில் திண்டுக்கல் தாலுகா அலுவலகம் அருகே உள்ள கச்சேரி தெருவில் செயல்படும் லாரி பார்சல் நிறுவன குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள், பைகள், பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்ட தட்டுகள் என 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story