தாளவாடியில் நடந்த மனுநீதிநாள் முகாமில் ரூ.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்; கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்
தாளவாடியில் நடந்த மனுநீதிநாள் முகாமில் ரூ.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்; கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்
தாளவாடி
தாளவாடியில் உள்ள பழைய தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் துறையின் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். கோபி ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார். இதில் 2 பேருக்கு முதியோர் உதவித்தொகையாக ரூ.24 ஆயிரமும், 67 பேருக்கு வேளாண்மை துறை சார்பில் ரூ.32 லட்சத்து 14 ஆயிரமும், 53 பேருக்கு தோட்டகலை துறை சார்பில் ரூ.7 லட்சத்து 19 ஆயிரத்து 800-ம், 25 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா ரூ.3 லட்சம் மதிப்பிலும், 20 பேருக்கு முதிர்கன்னி உதவி தொகையாக ரூ.2 லட்சத்து 40 ஆயிரமும் உள்பட 240 பேருக்கு ரூ.50 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றுக்கொண்டார். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முகாமில் தனித்துணை கலெக்டர் கோ.குமரன், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரங்கநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் இலாஹிஜான், கால்நடைத்துறை பராமரிப்பு இணை இயக்குனர் பழனிவேல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் கோதைச்செல்வி, தாளவாடி தாசில்தார் ரவிசங்கர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரத்தினம்மா, தாளவாடி ஊராட்சி தலைவி திராஷாயிணி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.