50 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்
50 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே வடக்கு சல்லிக்குளம் பகுதியில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி (வயது43), சுரேஷ் (38). கிரி (45) ஆகிய 3 பேரும் சாராய ஊறல் தயாரித்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 50 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர். சாராயம் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் எச்சரிக்கை விடுத்தார்.
Related Tags :
Next Story