மது, சாராயம் விற்ற 50 பேர் கைது

காந்தி ஜெயந்தியன்று மது, சாராயம் விற்ற 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
மது, சாராயம் விற்ற 50 பேர் கைது
Published on

மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் மற்றும் சாராயம் விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில், மது, சாராயம் விற்றதாக 50 பேர் கைது செய்யப்பட்டனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com