விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல படகு கட்டணம் 50 சதவீதம் உயர்வு


விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல படகு கட்டணம் 50 சதவீதம் உயர்வு
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல படகு கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல படகு கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

படகு போக்குவரத்து

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். மேலும் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படும்.

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலையில் கடற்கரையில் சூரிய உதயத்தை பார்த்து ரசிப்பர். பின்னர், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்து விட்டு திரும்புவார்கள். இதற்காக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகு சேவை நடத்தப்பட்டு வருகிறது.

கட்டணம் உயர்வு

இந்த நிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படும் படகுகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. அதன்படி முன்பு ரூ.50-ஆக இருந்த சாதாரண கட்டணம் ரூ.75 ஆகவும், சிறப்பு கட்டணம் ரூ.200-ல் இருந்து ரூ.300 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இவ்வாறு 50 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வு சுற்றுலா பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story