மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்


மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்
x

மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் வலியுறுத்தினர்.

திருவண்ணாமலை

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது.

மாநில தலைவர் இரா.பெருமாள்சாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன், மாநில பொருளாளர் அன்பழகன், மாநில தலைமையிட செயலாளர் ராவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை மாவட்ட தலைவர் தீபக்குமார் வரவேற்றார்.

கூட்டத்தில் முதுகலை ஆசிரியர் பணித்தொகுதியும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணி தொகுதியும் சமம் என்ற நிலையில் மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

செய்முறைத் தேர்வு மார்ச் 1-ந் தேதி தொடங்கி குறைந்தது 1 வார காலம் நடத்த வேண்டும். மாணவர்- ஆசிரியர் நலன் கருதி கணக்குப் பதிவியல் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கு தனித்தனி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்.

தேர்தல் அறிக்கையில் கூறியபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அனைத்து மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாநில செய்தி தொடர்பு செயலாளர் மகேந்திரன் மற்றும் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

முடிவில் மாவட்ட பொருளாளர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.



Next Story