தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பண்ணைகள் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படும் என கலெக்டர் ெசந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மீன்வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டம்
தூத்துக்குடிமாவட்டத்தில் பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன்வளர்ப்பை ஊக்குவிக்க உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 250 முதல் 1000 சதுர மீட்டர் அளவில் உள்ள பண்ணைக் குட்டைகளில் மீன்வளர்ப்பு மேற்கொள்ள மீன்குஞ்சு, மீன்தீவனம், உரங்கள், மீன்வளர்ப்புக்கான உள்ளீட்டு பொருட்கள் மற்றும் பறவை தடுப்புவேலி உள்ளிட்டவைகள் அமைக்க மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்தவர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
50 சதவீதம் மானியம்
அதன்படி ஒரு மீன்பண்ணைக்கு ஆகும் மொத்த செலவினம் ரூ.36 ஆயிரத்தில் 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் மீன் வளர்ப்போர் உரிய ஆவணங்களுடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர்அலுவலம், 166, வடக்கு கடற்கரை சாலை, மீன்துறை வளாகம், தூத்துக்குடி, தொலைபேசிஎண்;: 0461-2320458 என்ற முகவரியில் வார வேலை நாட்களில் நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வருகிற 20-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.