கிளை நூலகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது


கிளை நூலகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது
x

வாணியம்பாடி கிளை நூலகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி முழுநேர கிளை நூலகத்தில் அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் 20 மாணவர்கள் குரூப்-2 தேர்வு எழுதி ஐந்து பேர் முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறார்கள் மேலும் 15 மாணவர்கள் குரூப்-1 தேர்வு எழுதி முடிவுக்காக காத்து இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் நூலகத்தில் இருக்கும் போட்டி தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி நூல்களை படித்து போட்டி தேர்வுகளுக்கு தயாரானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து தேசிய நூலக வார விழாவினை கொண்டாடும் விதத்தில் 50 மரக்கன்றுகளை நூலக வளாகத்தை சுற்றி நட்டனர். நிகழ்ச்சியில் நூலகர் மணிமாலா, வாசகர் வட்ட தலைவர், அரசு பள்ளி ஆசிரியர்கள், நூலக பணியாளர்கள், வேர்கள் அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story