சோழவந்தான் அருகே விஷம் வைத்து 50 தெரு நாய்கள் கொல்லப்பட்டதால் பரபரப்பு - போலீசார் விசாரணை
சோழவந்தான் அருகே 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தெருநாய்கள்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் பகுதியான நரியம்பட்டி, மம்பட்டி, வையத்தான் ஆகிய கிராம பகுதியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் ஆங்காங்கே மர்மமான முறையில் இறந்து கிடந்தன. மர்ம நபர்கள் விஷம் வைத்து நாய்களை கொன்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு சென்ற விக்கிரமங்கலம் போலீசார் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் இறந்த நாய்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை
மேலும் அந்த பகுதியில் விஷம் கலந்த உணவை மர்ம நபர்கள் ஆங்காங்கே வீசி இருந்ததும், அதனை சாப்பிட்ட நாய்கள் உயிரிழந்து இருப்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நாய்களை விஷம் வைத்து கொன்ற நபர்கள் யார் என விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.