ரூ.50 ஆயிரம் புகையிலை பறிமுதல்


ரூ.50 ஆயிரம் புகையிலை பறிமுதல்
x

ரூ.50 ஆயிரம் புகையிலை பறிமுதல்

நீலகிரி

கூடலூர்

நாடுகாணி சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது அங்கு வந்த ஒரு லாரியை நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இந்த சமயத்தில் சக போலீசார் லாரியை சோதனை செய்தனர். அப்போது காய்கறி மூட்டைகளுக்கு இடையே சிறிய பைகள் இருப்பதை கண்டனர். அதை திறந்து பார்த்தபோது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. மொத்தம் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை கன்னியாகுமரிக்கு கடத்த முயன்று இருப்பது தெரியவந்தது. பின்னர் தேவாலா போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவரான கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த தருமராஜா (வயது 58) என்பவரை கைது செய்தனர். மேலும் லாரி மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story