26 வயது மனைவியை செக்ஸ் சித்ரவதை செய்து கொன்ற 50 வயது காவலாளி


26 வயது மனைவியை செக்ஸ் சித்ரவதை செய்து கொன்ற 50 வயது காவலாளி
x

வத்திராயிருப்பு அருகே 26 வயது மனைவியை செக்ஸ் சித்ரவதை செய்து கொன்ற காவலாளியை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான அத்திகோவில் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்தவர் வனராஜ் (வயது 50). இவருடைய முதல் மனைவி இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்தநிலையில் வனராஜ் 2-வதாக உமா (26) என்பவரை திருமணம் செய்து கொண்டார். அத்திக்கோவில் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், ஒரு தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்து காவலாளியாக வனராஜ் வேலை பார்த்து வந்தார்.

பிணமாக கிடந்தார்

சம்பவத்தன்று அந்த தோட்டத்தில் உள்ள மோட்டார் அறையின் மாடியில் வனராஜ், உமா ஆகிய 2 பேரும் படுத்து இருந்தனர். மறுநாள் காலையில் உமா காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

காரணம் என்ன?

உமா சாவுக்கான காரணம் குறித்து வனராஜிடம், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது அவர், "இரவில் நானும், உமாவும் மது குடித்துவிட்டு உறவு கொண்டோம். அப்போது, மது போதையில் எனது கையில் இருந்த டார்ச் லைட்டை வைத்து எனது மனைவியின் அடிவயிற்றில் அழுத்தியதால் அவள் காயம் அடைந்து, ரத்தப்போக்கு ஏற்பட்டது. அவள் வலியால் அலறினாள். ஆனால், நான் அதை பொருட்படுத்தாமல் தூங்கிவிட்டேன். மறுநாள் அவள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்", என்று கூறி இருக்கிறார்.

இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக் காக மாற்றி போலீசார் பதிவு செய்தனர். செக்ஸ் தொல்லை கொடுத்ததால், உமா இறந்தது தொடர்பாக வனராஜை, போலீசார் கைது செய்தனர்.


Next Story