கொரோனா சிகிச்சைக்கு தயார் நிலையில் 500 படுக்கைகள்


கொரோனா சிகிச்சைக்கு தயார் நிலையில் 500 படுக்கைகள்
x

வேலூர் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு தயார் நிலையில் 500 படுக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் நேற்று 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. கொரோனா தொற்று பரவுவதால் அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய வார்டுகள் தயார்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதில் 200 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஆஸ்பத்திரிகளுக்கு அதிகளவில் சிகிச்சைக்கு வரவில்லை. இது ஒருபுறமிருக்க, கொரோனா பரிசோதனைகள் அதிகப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வேலூருக்கு வரும் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் மூலம் கொரோனா மீண்டும் அதிகளவில் பரவ வாய்ப்புள்ளதால் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.


Next Story