தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
விழுப்புரம் நகரில் தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விழுப்புரம்
விழுப்புரம் நகரில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின்பேரில் நேற்று மாலை விழுப்புரம் நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் பாலசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் ரமணன், மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வக்குமார், உதவி பொறியாளர் இளையராஜா, உதவியாளர் கவுதம் ஆகியோர் அடங்கிய குழுவினர் விழுப்புரம் எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதி, காமராஜர் வீதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான கேரி பேக், பிளாஸ்டிக் டம்ளர் உள்ளிட்ட 500 கிலோ எடையுள்ள பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் 10 கடைகளுக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story