ஆட்டோவில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ஆட்டோவில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி
களியக்காவிளை:
விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் மார்த்தாண்டத்தை அடுத்த சாங்கை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை அவர் நிறுத்த கூறிய போது, அது நிற்காமல் சென்றது.
ஆட்டோவை வாகனத்தில் துரத்தி சென்று சாமியார் மடத்தில் மடக்கினர். உடனே ஆட்டோவை சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். ஆட்டோவில் அதிகாரி புரந்தரதாஸ் சோதனை செய்தபோது, 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரி நடத்திய விசாரணையில் அந்த அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அரிசி மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசியை கடத்தியவர் யார்? என்பது குறித்து அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story